பரிமாணம்
தேர்ந்தபரிமாண வரி இன் நீளம், அளவீடு, வழிகாட்டி பண்புகள் ஆகியவற்றை மாற்றுகிறது.
பரிமாணம் வரியின் வரி பாணியையோ அம்பு பாணியையோ நீங்கள் மாற்றியமைக்க விரும்பினால், வடிவூட்டு - வரி ஐத் தேர்ந்தெடுக.
பரிமாண வரிகள் என அழைக்கப்படும் அடுக்கு இல் பரிமாண வரியானது எப்போதும் நுழைக்கப்படுகின்றன. நீங்கள் அடுக்கை தென்படா வண்ணம் அமைத்தால், உங்களின் வரைதலில் நீங்கள் பரிமாண வரியைக் காணமாட்டீர்கள்.
வரி
Sets the distance properties of the dimension line and the guides with respect to each other and to the baseline.
வரியின் தூரம்
பரிமாண வரிக்கும் அடிப்படை வரிக்கும் உள்ள தூரத்தைக் குறிப்பிடுகிறது. (வரியின் தூரம் =0).
வழிகாட்டியின் தொங்கல்
அடிப்படை வரியில் இடது, வலது வழிகாட்டிகள் தொடக்கத்தின் நீளத்தைக் குறிப்பிடுகிறது (வரியின் தூரம்= 10). நேர்முறை மதிப்புகள் அடிப்படை வரியின் மேலுள்ள வழிகாட்டிகளை நீட்டிக்கும், எதிர்முறை மதிப்புகள் அடிப்படை வரியின் கீழுள்ள வழிகாட்டிகளை நீட்டிக்கும்.
வழிகாட்டியின் தூரம்
பரிமாண வரியில் இடது, வலது வழிகாட்டிகள் தொடக்கத்தின் நீளத்தைக் குறிப்பிடுகிறது. நேர்முறை மதிப்புகள் பரிமாண வரியின் மேலுள்ள வழிகாட்டிகளை நீட்டிக்கும், எதிர்முறை மதிப்புகள்பரிமாண வரியின் கீழுள்ள வழிகாட்டிகளை நீட்டிக்கும்.
இடது வழிகாட்டி
பரிமாண வரியில் இடது வழிகாட்டி தொடக்கத்தின் நீளத்தைக் குறிப்பிடுகிறது. நேர்முறை மதிப்புகள் பரிமாண வரியின் கீழுள்ள வழிகாட்டியை நீட்டிக்கும், எதிர்முறை மதிப்புகள் பரிமாண வரியின் மேலுள்ள வழிகாட்டியை நீட்டிக்கும்.
வலது வழிகாட்டி
பரிமாண வரியில் வலது வழிகாட்டி தொடக்கத்தின் நீளத்தைக் குறிப்பிடுகிறது. நேர்முறை மதிப்புகள் பரிமாண வரியின் கீழுள்ள வழிகாட்டியை நீட்டிக்கும், எதிர்முறை மதிப்புகள் பரிமாண வரியின் மேலுள்ள வழிகாட்டியை நீட்டிக்கும்
பொருளுக்குக் கீழான பரிமாண வரி
வரி பரப்பிலுள்ள பண்புகள் தொகுதியைத் திருப்பிபோடுகிறது.
தசம இடங்கள்
வரி பண்புகளின் காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட தசம இட எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது.
குறி விளக்கம்
பரிமாண உரையின் பண்புகளை அமைக்கிறது.
உரையின் இடம்
பரிணாம வரியையும் வழிகாட்டிகள்களையும் பொறுத்து பரிமாண உரையின் இடத்தைத் தீர்மானிக்கிறது.
The AutoVertical and AutoHorizontal checkboxes must be cleared before you can assign the Text position.
தானிசெங்குத்து
பரிமாண உரைக்கான உகப்பான செங்குத்து இடத்தைத் தீர்மானிகிறது.
தானிகிடைமட்டம்
பரிமாண உரைக்கான உகப்பான கிடைமட்ட இடத்தைத் தீர்மானிக்கிறது.
அளவீட்டு அலகுகளைக் காட்டு
பரிமாண அளவீட்டு அலகுகளை காட்டவோ மறைக்கவோ செய்கிறது. பட்டியலிலிருந்து நீங்கள் காட்சியளிக்கவிரும்பும் அளவீட்டு அலகையும் தேரலாம்.
வரியோடு இணையான
உரை, பரிமாண வரியோடு 90 பாகையிலோ இணையாகவோ உள்ளதைக் காட்சியளிக்கிறது.